நந்திகிராம் இடைத்தேர்தல்: மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியின் உதவியாளரின் தாயார் போட்டி..! - Seithipunal
Seithipunal


சமீபத்​தில் நடை​பெற்ற மேற்கு வங்க சட்​டமன்ற தேர்​தலில், பாரதிய ஜனதா கட்சி (பாஜக) வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றது. மாநிலத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் பெரும்பான்மைக்குத் தேவையான 148 இடங்களைக் கடந்து, 208 இடங்களைக் கைப்பற்றி முதன்முறையாக மேற்கு வங்கத்தில் பா.ஜ.க ஆட்சியை கைப்பற்றியது.

2011 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருந்த மம்தா பானர்ஜி தலைமையிலான அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் (TMC) படுதோல்வி அடைந்து இத்தேர்தலில் தனது ஆட்சியை இழந்துள்ளது.

பாஜ முதல்​முறை​யாக ஆட்​சி​யை பிடித்​த நிலையில், முதல்வராக சுவேந்து அதி​காரி, மே 06-ஆம் தேதி பதவி​யேற்​றார். இந்த நிகழ்ச்​சிக்கு 03 நாட்​களுக்கு முன்பு அவரது தனி உதவி​யாள​ராக இருந்த சந்​திர​நாத் ராத் சுட்​டு கொல்​லப்​பட்​ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த தேர்​தலில் முதல்​வர் சுவேந்து அதி​காரி, நந்​தி​கி​ராம், பவானிபூர் ஆகிய இரு தொகு​தி​களி​லும் போட்​டி​யிட்டு வெற்றி பெற்​றார். அவர், நந்​தி​கி​ராம் தொகு​தி​யில், தனது எம்​எல்ஏ பதவியை ராஜி​னாமா செய்​தார்.

இதையடுத்து வரும் அக்​டோபர் 06-ஆம் தேதி​ நந்​தி​கி​ராம் தொகு​தி​யில் இடைத்​தேர்​தல் நடை​பெறும் என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இந்த தொகுதியில் முதல்​வர் சுவேந்து அதி​காரி​யின் முன்​னாள் தனி உதவி​யாளர் சந்​திர​நாத் ராத்​தின் தாயார் ஹசி​ராணி ராத், பாஜ வேட்​பாள​ராக அறிவிக்​கப்​பட்​டுள்​ளார். 

இவர், வேட்பு மனு தாக்​கல் செய்​வதற்கு முன் அவருக்கு ஆதர​வாக, முதல்​வர் சுவேந்து அதிகாரி பிர​சா​ரம் செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mother of Chief Minister Suvendu Adhikaris aide to contest the Nandigram by election


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




சினிமா

Seithipunal
--> -->