பாடத்திட்டம் 30 விழுக்காடு குறைப்பு.. மத்திய அமைச்சர் அதிகாரபூர்வ அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கமானது கடுமையான அளவு அதிகரித்தது. இதனால் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்விக்கு விடையில்லாமல், ஊரடங்கு மட்டும் கொரோனாவின் வீரியத்தால் தொடர்ந்து வருகிறது.

பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்விக்கே விடையில்லாமல் இருக்கும் சூழலில், பள்ளியில் பயின்று வரும் மாணவர்களின் நலன் கருதி, மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வந்தது.

இந்நிலையில், சி.பி.எஸ்.சி பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இது குறித்து ட்விட்டரில் அறிவித்துள்ளார். 

சி.பி.எஸ்.சி வகுப்பு பயின்று வரும் மாணவர்களுக்கான 30 விழுக்காடு பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளது. ஒன்பதாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை பயின்று வரும் மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் 30 விழுக்காடு அளவு குறைக்கப்பட்டுள்ளது. 

மாணவர்களின் கற்றல் சுமையை குறைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த விஷயத்தை மேற்கொள்ள பாடத்திட்ட கல்வியாளர்களிடம் கருத்து கேட்கப்பட்டு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ramesh Pokhriyal announce reduce CBSE syllabus 30 percentage


கருத்துக் கணிப்பு

முதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..
கருத்துக் கணிப்பு

முதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..
Seithipunal