பாடத்திட்டத்தில் ''ராமாயணம்'' - நடிகர் அருண் கோவில் பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


கடந்த 1987 ஆம் ஆண்டு ராமானந்த் சாகர் தயாரிப்பில் உருவான இராமாயணம் தொடர் ஞாயிற்றுக்கிழமை தோறும் ஒளிபரப்பானது. இந்த தொடரில் நடித்த நடிகர் அருண் கோவில் ராமர் வேடத்திலும், நடிகை தீபிகா சீதா வேதத்திலும் நடித்திருந்தனர். 

அப்போதே நாடு முழுவதும் கோடிக்கணக்கானோர் இந்த தொடரை பார்த்தனர். இதற்கிடையே உத்தரபிரதேசம் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கடந்த மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக பிரதிஷ்டை செய்யப்பட்டது. 

கோவிலில் தரிசனம் செய்ய நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இந்நிலையில் வாரணாசியில் ராமாயணத்தில் ராமர் வேடத்தில் நடித்த நடிகர் அருண் கோவில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, 

நமது பாடத்திட்டத்தில் ராமாயணம் சேர்க்கப்பட வேண்டும். ஏனென்றால் ராமாயணத்தை மதமாக பார்ப்பதில் எந்த நியாயமும் இல்லை. ராமாயணம் என்பது நமது வாழ்க்கையின் தத்துவம். 

எல்லோரும் எப்படி வாழ வேண்டும். உறவுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது. ஒருவர் எவ்வளவு பொறுமையாக இருக்க வேண்டும் என்பதை காட்டுவதால் சனாதன மக்களுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் உரிதானது என தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ramayanam in syllabus actor Arun Kovil interview


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->