போர், வன்முறையை இந்தியா ஒருபோதும் ஆதரித்ததில்லை - ராஜ்நாத் சிங் - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வசந்தபுரத்தில் உள்ள பிரமாண்ட ராஜாதிராஜா கோவிந்தா கோவிலில் சர்வதேச சங்கம் (ISKCON) ஏற்பாடு செய்திருந்த கீதா தான யாகத்தில் கலந்து கலந்து கொண்ட மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நிகழ்ச்சியில் உரையாற்றினார்.

அப்பொழுது, இந்தியா ஒருபோதும் வன்முறையையும், போரையும் ஆதரித்தது இல்லை. இருப்பினும் அநீதி மற்றும் அடைக்குமுறைகளுக்கு இந்தியா நடுநிலையாக இருக்காது என்று தெரிவித்துள்ளார்.

மகாபாரதத்தைப் பற்றிக் குறிப்பிட்ட அவர், குருக்ஷேத்திரத்தில் அர்ஜுனனுக்கு பகவான் கிருஷ்ணர் வழங்கிய போதனைகள் ஸ்ரீமத் என்று அழைக்கப்படுகின்றன என்றும், கீதையைப் படிப்பதாலும், உள்வாங்குவதாலும் ஒருவன் அச்சமற்றவனாக மாறுகிறான் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்வர் பிஎஸ் எடியூரப்பா, இஸ்ரோ தலைவர் சோம்நாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajnath Singh says India has never supported war and violence


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->