மாணவர்களே ரெடியா..! UG-CUET தேர்வு தேதிகள் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு கடந்த 2022 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கடந்த மே 5ம் தேதி வரை பெறப்பட்ட நிலையில் மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களில் திருத்தங்கள மேற்கொள்ள இன்று வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள ஏதேனும் சிரமம் ஏற்பட்டால் 011-40759000 என்ற தொலைபேசி எண் அல்லது cuet-ug@nta.ac.in என்ற மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்களின் எண்ணிக்கையை பொறுத்து கணினி வழி அல்லது நேரடி எழுத்து தேர்வு நடத்தப்படுகிறது. 

அந்த வகையில் நடப்பு கல்வியாண்டிற்கான க்யூட் நுழைவு தேர்வு மே 15ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 380 நகரங்களிலும், 26 வெளிநாடு மையங்களிலும் இந்த தேர்வானது நடைபெறுகிறது. தேர்வு நடைபெறும் நாள் மற்றும் தேர்வு மைய விவரங்களை தேசிய தேர்வு முகமை தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இணையதள வழியிலான தேர்வுகள் வரும் மே 21, 22, 24 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும் அதற்கான வழிமுறைகள் பின்னர் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

UG cuet Exam announced


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->