பூங்காவிற்குள் "நாய் அழைத்து செல்ல" புது ரூல்ஸ்!! - சென்னை மாநகராட்சி அதிரடி.! - Seithipunal
Seithipunal


சென்னையில் ஐந்து வயது சிறுமியை இந்தியாவில் தடை செய்யப்பட்ட வகை நாய்கள் கடித்துக் குதிரையை விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதன் உரிமையாளர்கள் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

சென்னையை அதிர வைத்த இந்த சம்பவத்தை அடுத்து பூங்காவிற்குள் நாய்களைக் கொண்டு செல்வதற்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது சென்னை மாநகராட்சி. 

அதன்படி, 

1) உரிமம் பெற்ற தடுப்பூசி செலுத்தப்பட்ட வளர்ப்பு நாய்கள் மட்டுமே பூங்காவிற்குள் அனுமதிக்க வேண்டும். 

2) கழுத்துக்கு சங்கிலி போட்டும் வாயை மூடியும் அழைத்து வரப்படும் நாய்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும். 

3) பூங்காவிற்குள் உள்ள குழந்தைகள் விளையாடும் இடத்தில் நாய்களுக்கு அனுமதி இல்லை. 

4) ஒருவர் ஒரு வளர்ப்பு நாயை மட்டும் பூங்காவிற்குள் அழைத்து வரவேண்டும். 

மேற்கண்ட விதிமுறைகளை கடைப்பிடித்து பூங்காவிற்குள் வளர்ப்பு நாய்களை அனுமதிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பூங்கா கண்காணிப்பாளர்களுக்கும் சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai corporation issued news rules dog getting into park


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->