ராஜேஷ் லக்கானி மத்திய அரசு பணிக்கு மாற்றம்..மத்திய அரசு உத்தரவு!
Rajesh Lakhani transferred to central government job Central Government Order
மத்திய அரசின் கல்வித்துறையின் கீழ் செயல்படும் நவோதயா பள்ளிகளின் நவோதயா வித்யாலயா சமிதியின் ஆணையராக தமிழக அரசு கூடுதல் தலைமை செயலாளர் ராஜேஷ் லக்கானி நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான இந்த உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. எனவே அவர் விரைவில் அந்த பொறுப்பை ஏற்க உள்ளார்.
தமிழகத்தில் கடந்த 1992-ம் ஆண்டு பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்தவர் சத்தீஷ்கார் மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஷ் லக்கானி, அப்போது அவர், அந்த ஆண்டு தர்மபுரியில் உதவி கலெக்டராக தனது பணியை தொடங்கினார். பின்னர் 2003 முதல் 2004-ம் ஆண்டு வரை கன்னியாகுமரியிலும், 2005 முதல் 2006-ம் ஆண்டு வரை தேனியிலும் கலெக்டராக பணிபுரிந்து சிறந்த அதிகாரியாக மக்கள் மத்தியில் உயர்ந்தார் .
அதனை தொடர்ந்து நகராட்சி நிர்வாக ஆணையர், சிப்காட், சுற்றுலாத்துறை ஆகியவற்றின் செயலாளராகவும் இருந்த ராஜேஷ் லக்கானி 2016-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக பணியாற்றினார்.

இதையடுத்து அதன்பின் ஊரக வளர்ச்சித்துறையின் முதன்மை செயலாளராகவும், தமிழ்நாடு மின்சார வாரிய தலைவராகவும் பணியாற்றினார் ராஜேஷ் லக்கானி. இப்போது கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்தில் இருக்கும் ராஜேஷ் லக்கானி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கமிஷனராக இருக்கிறார். இதுவரை 33 ஆண்டுகள் தமிழகத்தில் பணியாற்றிய ராஜேஷ் லக்கானி மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மத்திய அரசின் கல்வித்துறையின் கீழ் செயல்படும் நவோதயா பள்ளிகளின் நவோதயா வித்யாலயா சமிதியின் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது . மேலும் அதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. எனவே அவர் விரைவில் அந்த பொறுப்பை ஏற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .
English Summary
Rajesh Lakhani transferred to central government job Central Government Order