விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, 380 கூடுதல் சிறப்பு ரயில் இயக்க திட்டம்: ரயில்வே துறை அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


எதிர்வரும் ஆகஸ்ட் 27-ஆம் தேதி முதல் செப்டம்பர் 06-ஆம் தேதி  வரை நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இந்த விநாயர் சதுர்த்தியை முன்னிட்டு, 380 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக இந்திய ரயில்வே துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு, 380 சிறப்பு ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ள்ளதாகவும், கடந்த ஆண்டை காட்டிலும் தற்போது அதிக எண்ணிக்கையிலான சிறப்பு ரயில்கள் இயக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அத்துடன், விநாயகர் சதுர்த்தி திருவிழாவுக்க்காக கடந்த 2023-இல் 305 சிறப்பு ரயில்களும், 2024-இல் 358 சிறப்பு ரயில்களையும், இயக்கிய நிலையில், இந்த வருடம் 380 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மத்திய ரயில்வே சார்பில் அதிகபட்சமாக, மஹாராஷ்டிரா மற்றும் கொங்கன் வட்டாரத்தில் 296 ரயில்களும், மேற்கு ரயில்வே சார்பில் 56 ரயில்களும், தெற்கு ரயில்வே சார்பில் 22 ரயில்களும், கொங்கன் ரயில்வே சார்பில் 06 ரயில் சேவைகளும் இதில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..

இதில் கொங்கன் வட்டாரப்பகுதி ரயில்கள் கொலாட், மங்கோன், சிப்லன், ரத்னகிரி, கனகவல்லி, சிந்துதர்க், கூடல், சவந்த்வாடி சாலை, மத்கோன், கர்வார், உடுப்பி மற்றும் சுரத்கல் வழியாக செல்லும் என்று, ரயில்வே துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும், தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Railways plans to run 380 additional special trains on the occasion of Ganesha Chaturthi


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->