ரயில்வே நடைமேடையில் வளர்ந்தவன் இப்போது நாடாளுமன்றத்தில்! - பிரதமர் மோடி நெகிழ்ச்சி! - Seithipunal
Seithipunal


பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் இன்று, ஏழை குடும்பத்தில் பிறந்து ரயில்வே மேடையில் வளர்ந்த எனக்கு மக்கள் இவ்வளவு அன்பை கொடுத்துள்ளனர் என பேசினார். 

நாடாளுமன்றத்தில் இன்று சிறப்பு கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று பழைய கட்டிடத்தில் கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

நாளை முதல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் கூட்டம் தொடங்க உள்ளது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தின் 75 ஆண்டு கால வரலாறு குறித்து விவாதத்தை தொடங்கி வைத்து உரையாற்றினார். 

அப்போது அவர் தெரிவித்திருப்பதாவது, ''ஏழை குடும்பத்தில் பிறந்து ரயில்வே மேடையில் வளர்ந்த ஒரு குழந்தை நாடாளுமன்றத்திற்குள் வர முடியும் என நான் நினைக்கவில்லை. 

மக்களிடம் நான் இவ்வளவு அன்பை பெறுவேன் என்பதையும் நினைத்துக் கூட பார்க்கவில்லை. முதல்முறையாக எம்.பி யாக தேர்வாகி நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தபோது நான் ஜனநாயகத்தின் கோவிலை கீழே விழுந்து வணங்கினேன்'' என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

railway platform grew man now Parliament


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக மற்றும் தேமுதிக புறக்கணித்துள்ளதற்கு காரணம்?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக மற்றும் தேமுதிக புறக்கணித்துள்ளதற்கு காரணம்?
Seithipunal
--> -->