வாஜ்பாய் நினைவிடத்தில் ராகுல் காந்தி மலர் தூவி மரியாதை..!!
Rahul Gandhi pays floral tributes at Vajpayee Memorial
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த நடைபயணம் தற்போது டெல்லியை அடைந்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற பேரணியில் மக்கள் நீதி மய்யம் தொண்டர்களுடன் அக்கட்சியின் தலைவர் கமலஹாசன் கலந்து கொண்டார்.

இந்த நிலையில் ராகுல் காந்தியின் பாதயாத்திரைக்கு ஏழு நாள் இடைவெளி விடப்பட்டுள்ளது. டெல்லியில் அடுத்த ஏழு நாட்களுக்கு ஓய்வெடுக்கும் ராகுல் காந்தி பிறகு தனது பாதயாத்திரையை காஷ்மீர் நோக்கி தொடங்க உள்ளார். இந்த நிலையில் இன்று டெல்லியில் அமைந்துள்ள மகாத்மா காந்தி, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, அடல் பிகாரி வாஜ்பாய் ஆகியோரின் நினைவிடங்களுக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். நேற்று முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 98 வது பிறந்த தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்ட நிலையில் இன்று அவரது நினைவிடத்தில் ராகுல் காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Rahul Gandhi pays floral tributes at Vajpayee Memorial