ராகுல்காந்தி எம்.பி. பதவி தகுதிநீக்கம்.. வயநாடு தொகுதி காலியானதாக அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக முன்னாள் அமைச்சரும், தற்போதைய பாஜக சட்டமன்ற உறுப்பினரான புர்னேஷ் மோடி குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை நேற்று நடைபெற்ற நிலையில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

இதனையடுத்து ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதித்ததை தொடர்ந்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், இந்த கிரிமினல் வழக்கின் அடிப்படையில் ராகுல் காந்தியின் எம்.பி‌. பதவி பறிக்கப்பட்டுள்ளது. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து ராகுல் காந்தி தகுதி நீக்க நடவடிக்கைக்கு நாடு முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இதனையடுத்து ராகுல் காந்தி வெற்றி பெற்ற கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதி காலியாக உள்ளதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. அத்துடன், ஜலந்தர், லட்சத்தீவு மற்றும் வயநாடு ஆகிய மக்களவை தொகுதிகள் காலியாக இருப்பதாக மக்களவை செயலகம் இணையதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rahul Gandhi MP Disqualification Wayanad Constituency Vacancy Announcement


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->