நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம்; கல்வி அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்: ராகுல் காந்தி கோரிக்கை..!
Rahul Gandhi demands the Education Ministers resignation over the NEET question paper leak controversy
ராஜஸ்தானில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம் நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வினாத்தாள் கசிவு குற்றச்சாட்டினால் இந்த ஆண்டு நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து நீட் மறுதேர்வு வரும் ஜூன் 21 அன்று நடைபெற உள்ளது. மேலும், அடுத்த ஆண்டு முதல் நீட்-யுஜி தேர்வு கணினி முறையில் நடத்தப்படும் என மத்திய கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது;
''2024-இல் நீட் வினாத்தாள் கசிந்தது, தேர்வு ரத்து செய்யப்படவில்லை, கல்வி அமைச்சர் ராஜினாமா செய்யவில்லை. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, ஒரு குழு அமைக்கப்பட்டது.
2026-இல் நீட் வினாத்தாள் கசிந்தது, தேர்வு ரத்து செய்யப்பட்டது, கல்வி அமைச்சர் இன்னும் ராஜினாமா செய்யவில்லை. சிபிஐ மீண்டும் விசாரித்து வருகிறது. மற்றொரு குழு அமைக்கப்படும்.
பிரதமர் மோடியிடம் நாடு சில கேள்விகளைக் கேட்கிறது, அவற்றுக்குப் பதிலளியுங்கள். ஏன் மீண்டும் மீண்டும் வினாத்தாள் கசிவுகள் நடக்கின்றன?. இந்த 'தேர்வு வினாத்தாள் கசிவு விவாதம்' குறித்து ஏன் மீண்டும் மீண்டும் மவுனம் காக்கிறீர்கள்?. மீண்டும் மீண்டும் தோல்வியடையும் கல்வி அமைச்சரை ஏன் பதவி நீக்கம் செய்யவில்லை?'' என்று ராகுல் கேள்வி யெழுப்பியுள்ளார்.
English Summary
Rahul Gandhi demands the Education Ministers resignation over the NEET question paper leak controversy