காஷ்மீருக்கு செல்லும் ரபேல்....எப்ப என்ன நடக்குமோ அஞ்சி நடுங்கும் பாகிஸ்தான்...!! - Seithipunal
Seithipunal


இந்திய விமானப் படைக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த, ‘டசால்ட்’ நிறுவனத்திடம் ரபேல் ரக அதி நவீன போர் விமானங்கள் வாங்க கடந்த 2016-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது.  

இந்த ரக போர் விமானம் 2 இரட்டை என்ஜின் கொண்டதாகும்.இதன் சிறப்பு என்னவென்றால்,வானில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்குவது மட்டுமின்றி, பூமியில் உள்ள இலக்குகளையும் துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது.இந்த விமானம் இந்திய விமானப் படையில் சேர்ப்பதன் மூலம் இந்திய ராணும் மிகவும் பலம் வாய்ந்ததாக இருக்கும்.

இந்த நிலையில்,ஒப்பந்தம் செய்தபடி பிரான்ஸ் நாட்டின் ரபேல் போர் விமானங்கள் முதல் கட்டமாக 4 விமானங்கள் செப்டம்பர் 20-ம் தேதி இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது என பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

இதற்கான விழா வரும் செப்டம்பர் 3-வது வாரத்தில் பிரான்ஸ் நாட்டில் நடைபெற உள்ளது. முதல் கட்டமாக 4 ரபேல் போர் விமானங்கள் ஒப்படைக்கப்படுகிறது. விழாவில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மற்றும் விமானப்படை தளபதி பி.எஸ். தனோவா உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.மேலும்,பிரான்ஸ் நாட்டு உயர் அதிகாரிகளும் விழாவில் கலந்து கொள்கின்றனர்.மற்ற விமானங்கள் அடுத்த ஆண்டு மே மாதம் முதல் வரத்தொடங்கும். இவ்வாறு பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்த ரக ரபேல் போர் விமானத்தி்ல் பயிற்சி பெறுவதற்காக இந்திய விமானப்படை வீரர்கள் 24 பேர்களுக்கு 3 கட்டங்களாக பயிற்சி அளிக்கப்படுகிறது.இந்த வகை போர் விமானங்கள் பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் பயன்படுத்தப்படும் என ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒரு பேட்டியில் கூறுகையில் அணு ஆயுத கொள்கை மாறலாம் என குறிப்பிட்டார். இந்நிலையில் ரபேல் போர் விமானங்கள் பாகிஸ்தான் எல்லையில் பயன்படுத்தப்படும் என ராணுவ வட்டாரங்கள் கூறுவதால் பாகிஸ்தான் மிரண்டுபோயுள்ளது.இந்தியா எப்ப என்ன செய்யுமோ என கலக்கத்தில் உள்ளதக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

rafale fighter jets comes soon to border dispute with pakistan


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->