டோக்கியோவில் தொடங்கியது க்வாட் நாடுகளின் உச்சி மாநாடு.. பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.! - Seithipunal
Seithipunal


இந்தியா அமெரிக்கா ஆஸ்திரேலியா ஜப்பான் ஆகிய 4 நாடுகள் சேர்ந்து 'குவாட்' என்ற அமைப்பை உருவாக்கி உள்ளது. குவாட் தலைவர்களின் முதல் கூட்டம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் காணொளி வாயிலாக நடைபெற்றது. இரண்டாவது மாநாடு செப்டம்பர் மாதம் வாஷிங்டனில் நடந்தது. இதில் 4 நாட்டு தலைவர்களும் பங்கேற்றனர்.

இந்தநிலையில் குவாட் அமைப்பின் உச்சி மாநாடு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று  நடைபெறுகிறது. இந்த குவாட் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு நேற்று சென்றடைந்தார் பிரதமர் மோடி.

மேலும், இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடோ மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஆகிய தலைவர்களும் கலந்துகொள்கின்றனர்.

இந்தோ பசிபிக் பிராந்திய நிலவரம் மற்றும் பரஸ்பர நலன் சார்ந்த உலக பிரச்சினைகள் குறித்து குவாட் தலைவர்கள் கருத்து பரிமாற்றம் செய்துகொள்ள இம்மாநாடு நல்ல வாய்ப்பாக அமையும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்றைய முக்கிய நிகழ்வாக டோக்கியோவில் ' குவாட்' மாநாடு துவங்குகிறது. இதில் உணவு பாதுகாப்பு, ரஷ்யா, உக்ரைன் போர் விவகாரம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து 'குவாட்' தலைவர்கள் விவாதிக்கின்றனர். பின்னர் பிரதமர் மோடி முக்கிய உரையாற்ற உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Quad conference starts now PM Modi addressed


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->