கார் பேனட்டின் மீது காவல்துறை அதிகாரி.. பரபரப்பு வீடியோ காட்சிகள்.. கொந்தளித்துப்போன காவல்துறை.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கரோனா வைரஸின் தாக்கமானது தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால் இந்தியா முழுவதும் நாடுதழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மக்கள் அனைவரும் அத்தியாவசிய தேவையின்றி வெளிய வர அனுமதி மறுக்கப்பட்டது. 

மேலும், வெளியே வரும் நபர்கள் முகக்கவசம் அணிந்து வரவும், சானிடைசரை உபயோகம் செய்து கைகளை சுத்தம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில், ஏற்கனவே பஞ்சாப் மாநிலத்தில் ஒரு கும்பலை சார்ந்தவர்களின் நடவடிக்கையால் காவல் துறை அதிகாரியின் கைகள் துண்டாகி, உடனடி சிகிச்சைக்கு பின்னர் உடலுடன் கைகள் இணைக்கப்பட்டுள்ளது. 

பஞ்சாப் மாநிலத்தில் 772 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 20 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜலந்தர் பகுதியில் காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்துள்ளனர். இந்த நேரத்தில், காரில் ஒரு நபர் வந்துள்ளார். 

இவரை காவல் துறையினர் தடுத்து விசாரணை மேற்கொள்ள முயற்சிக்கையில், அதிகாரி ஒருவரை காரில் வேகமாக ஏற்றியுள்ளான். நல்ல வேலையாக காவல் துறை அதிகாரி காரின் பேனட் மீது தாவி படுத்துள்ளார். இதனையடுத்து பேனட்டின் மீது அமர்ந்தபடியே வாகனம் சிறிது தூரம் சென்றது. 

பின்னர் காரை ஓரம்கட்டவே, விரைந்து வந்த காவல் துறையினர் கார் ஓட்டுனரை அடித்து தரதரவென இழுத்து சென்றனர். மேலும், காரை இயக்கிய நபரின் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது குறித்த பதைபதைப்பு வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Punjab police arrest man create violent corona virus amid


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->