16 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை! மொத்த மாநிலமும் கொந்தளிப்பில்...!
Punjab girl kidnapped assaulted
பஞ்சாப் மாநிலம் மொகாலி ஜிராஜ்பூரில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் 16 வயது சிறுமி பணியாற்றி வந்தார்.
சம்பவம் நிகழ்ந்த இரவு, வேலை முடிந்து சண்டிகர்-அம்பாலா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மால் அருகே, வீடு திரும்ப ஆட்டோவுக்காக காத்திருந்தார்.
அப்போது, அருகில் வந்த ஒரு காரில் இருந்த மர்ம நபர்கள், அந்த சிறுமியை வலுக்கட்டாயமாக காருக்குள் இழுத்து கடத்திச் சென்றனர். காரில் செல்வதற்குள் மற்றும் அதன்பின், சிறுமி சித்ரவதை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், சண்டிகரின் ஒரு புறநகர் பகுதியில் உள்ள தனிமையான இடத்திற்கு சிறுமியை அழைத்து சென்ற அவர்கள், அங்கும் வன்கொடுமை செய்தனர். பின்னர், சிறுமியை மீண்டும் கடத்தப்பட்ட இடத்திலேயே இறக்கிவிட்டு தப்பி ஓடினர்.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, சம்பவத்துடன் தொடர்புடைய மர்ம நபர்களை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
சந்தேகத்திற்கு இடமளிக்கும் பகுதிகளில் கண்காணிப்பு கேமிரா பதிவுகளும் சோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
English Summary
Punjab girl kidnapped assaulted