புனே பாஜக எம்.பி. கிரிஷ் பாபட் காலமானார்..! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிர மாநிலம் புனே மக்களவைத் தொகுதி பாஜக எம்.பி. கிரிஷ் பாபட் உடல் நலக் குறைவால் இன்று காலமானார்.

1950ம் ஆண்டு செப்டம்பர் 3ஆம் தேதி புனேவில் பிறந்தவர் கிரிஷ் பாபட். இவர் புனே நகர பாஜக செயலராக 1980ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். இதையடுத்து 1983ல் நடந்த புனே முனிசிபல் கார்ப்பரேஷன் இடைத் தேர்தலில் போட்டியிட்டு வென்ற இவர், 1995ல் முதல் முறையாக எம்.எல்.ஏ.வானார். இதைத் தொடர்ந்து அடுத்த நான்கு முறையும் மீண்டும் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம், கிரிஷ் பாபட் ஐந்து முறை கஸ்பா பெத் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்தார்.

இந்நிலையில், புனே மக்களவைத் தொகுதி எம்.பி. பதவியை வகித்து வந்த இவர், புனேவில் உள்ள தீனாநாத் மருத்துவமனையில் இன்று அதிகாலை உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இவருடைய மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதில் எம்.பி. கிரிஷ் பாபட் மறைவுக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், புனேவைச் சேர்ந்த லோக்சபா எம்.பி., ஸ்ரீ கிரிஷ் பாபட் காலமானது வருத்தமளிக்கிறது. மக்களின் நல்வாழ்வுக்காக பாடுபடும் அடிமட்டத் தலைவராக அறியப்பட்டார். பல சமூக சேவை முயற்சிகளிலும் அவர் முன்னணியில் இருந்தார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு அனுதாபங்கள் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pune BJP MP Girish Bapat Passes Away


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->