#BREAKING | புதுவை மாநிலத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு அறிவிப்புகள் - கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டார்! - Seithipunal
Seithipunal


கோடை காலம் நெருங்கி வருவதை முன்னிட்டு அனைத்து மாநிலங்களும் தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றன . இது தொடர்பான பல்வேறு அறிவிப்புகளை அந்தந்த மாநில கல்வித்துறை அறிவிக்க தொடங்கி இருக்கிறது.

பனிரெண்டாம் வகுப்பு களுக்கான பொதுத் தேர்வுகள் முடிவடைந்த நிலையில் நேற்று முதல் பத்தாம் வகுப்பிற்கான பொது தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதன் பிறகு ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்புகளுக்கான தேர்வுகளைப் பற்றிய அறிவிப்பை மாநிலக் கல்வித் துறை வெளியிடும்.

இந்நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுச்சேரியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு களுக்கான இறுதி ஆண்டு தேர்வு பட்டியலை அம்மாநில கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம்  வெளியிட்டுள்ளார்.

அதன்படி ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள்  வருகின்ற 11-ம் தேதி துவங்கி 19ஆம் தேதி முடிவடையும் என்றும் ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதி வரை கோடை  விடுமுறை எனவும்  கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Puducherry educational minister anounce 1 to 10th std students exam results


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->