புதுச்சேரிக்கு செல்லும் மக்களே..புதுச்சேரி பேருந்து நிலையம் தற்காலிகமாக இடமாற்றம்!! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி பேருந்து நிலையத்தில் கட்டுமானபணிகள் நடைபெற்று வருவதால், புதுச்சேரி பேருந்து நிலையம் தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

புதுச்சேரி பேருந்து நிலையத்தில் கட்டுமான பணிகள் விரைவாக நடைபெற்று வருவதால், புதுச்சேரி பேருந்து நிலையம் தற்காலிகமாக ஏ.எப்.டி மைதானத்திற்கு இடமாற்றம் செய்ய ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கு  அடிப்படை வசதியான குடிநீர், கழிப்பறை, நிழற்குடை போன்றவற்றை மைதானத்தில் விரைவாக அமைக்கப்பட்டு வருகிறது.


கடலூர் சாலையில் உள்ள தியாகி வெங்கடசுப்பா ரெட்டியார் சிலையிலிருந்து ரயில்வே கேட் வரை சாலையின் இருபுறமும் வாகனங்களை நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி பேருந்து நிலையத்தில் கட்டுமானப் பணிகள் முடியும் வரை அனைத்து வழிதட பேருந்துகளும் மைதானத்தில் இருந்து இயக்கப்படும் என்று அறிவித்துள்ளது. வரும் 16ஆம் தேதியில் இருந்து மைதானத்தில் இயங்கும் பேருந்து நிலையத்தை பயன்படுத்திகொள்ள வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி புதுச்சேரியில் இருந்து கடலூர் மார்க்கமாகவும், விழுப்புரம் மார்க்கமாகவும்  மேலும் சென்னை செல்லும் பேருந்துகள் மைதானத்தில் இருந்து புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பயணிகள் அனைவரும் தற்காலிக பேருந்து பயன்படுத்தி ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Puducherry bus station temporarily relocated


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?
Seithipunal
--> -->