ஆயர் மீது பாலியல் புகார் அளித்த கன்னியாஸ்திரிக்கு உளவியல் ரீதியாக துன்புறுத்தல்! - Seithipunal
Seithipunal


பேசாமலும் அடிப்படை வசதிகளை வழங்காமலும் துன்புறுத்தல்!

கேரள மாநிலம் கல்பெட்டாவில் உள்ள கன்னியர் மடத்தைச் சேர்ந்தவர் கன்னியாஸ்திரி லூசி. ஜலந்தார் ஆயர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசில் புகார் செய்து அந்த வழக்கானது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 

இதன் காரணமாக கன்னியாஸ்திரி லூசியை கன்னியர் மடத்திலிருந்து வெளியேற்ற மடத்தின் நிர்வாகிகள் நடவடிக்கை எடுத்து இருந்தனர். அந்த நடவடிக்கை எதிர்த்து கன்னியாஸ்தி லூசி மனந்தவாடி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து அங்கேயே தங்கி கொள்ள அனுமதியும் வழங்கியது.

இந்நிலையில் கன்னியாஸ்திரி லூசி நேற்று காலை திடீரென அவர்  தங்கி இருந்த கன்னியர் மடம் முன் போராட்டத்தில் ஈடுபட்டார். கன்னியர் மட நிர்வாகிகள் தன்னை மடத்திலிருந்து வெளியேற்ற உளவியல் ரீதியாக துன்புறுத்துகின்றனர். தன்னிடம் பேசாமலும் அடிப்படை வசதிகளை வழங்காமலும் துன்புறுத்துவதாக குற்றச்சாட்டு உள்ளார்.

கன்னியாஸ்தி லூசு நடத்திய போராட்டத்தால் அப்பகுதியில் திடீரென பரப்பு ஏற்பட்டது. மேலும் ஏராளமான மக்கள் திரண்டனர். சிலர் லூசியின் போராட்டத்தை தடுக்க முயன்றுள்ளனர். இந்த தகவல் அறிந்து வந்த போலீசார் இரண்டு பேர் கைது செய்துள்ளனர். பின்னர் இருவரும் சொந்த ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Psychological harassment to the nun who complained about sexual abuse of the priest


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->