அனுமதி தந்த மத்திய அரசு.! ஆர்வத்தில் 23 தனியார் நிறுவனங்கள்.!   - Seithipunal
Seithipunal


ரயில்சேவையில் வருமானம்  குறைந்துள்ளதாக தனியார் ரயில்களை இயக்க மத்திய அரசு சில மாதங்களுக்கு முன் அனுமதியளித்தது. இந்த திட்டத்திற்கு டெண்டர் விடுவதற்கு முன்  ஆலோசனைக் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. 

இந்த நிலையில், 109 வழித்தடங்களில் தனியார் ரயில்களை இயக்க மத்திய அரசு அனுமதியளித்தததை தொடர்ந்து பாம்பர்டியர், ஆல்ஸ்டோம் உள்ளிட்ட 23 தனியார் நிறுவனங்கள் ரயில்களை இயக்க விருப்பம் தெரிவித்துள்ளன. 

பயணிகளுக்கான ரயில்சேவையில் வருமானம்  குறைந்துள்ளதாகக் கூறி 151 தனியார் ரயில்களை இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, தனியார் நிறுவனங்கள் ரயில்களை இயக்க  12 தகுதிகளை பெற்றிருக்க வேண்டும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் மூலமாக ரயில்வே துறைக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு கிடைக்கும் என கூறப்படும் நிலையில், ஐஆர்சிடிசி, மேதா க்ரூப், பெல், பாரத் போர்ஜ், ஸ்டெர்லைட் போன்ற நிறுவனங்களும் இதில் ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

private sector in indian railway has accepeted


கருத்துக் கணிப்பு

நீட் பிரச்சனைக்கு தி.மு.க தான் காரணம் என்று தமிழக முதல்வர் கூறியது..
கருத்துக் கணிப்பு

நீட் பிரச்சனைக்கு தி.மு.க தான் காரணம் என்று தமிழக முதல்வர் கூறியது..
Seithipunal