கூட்டு உற்பத்தி, கூட்டு உருவாக்கம் உள்ளிட்டவற்றில் ரஷ்யாவுடன் இணைந்து பயணிப்போம்; பிரதமர் மோடி உரை..!
Prime Minister Modi says we will travel together with Russia in joint development and other areas
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், 02 நாள் பயணமாக நேற்று இந்திய வந்தடைந்தார். அவருடன் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து பேசியதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
அதிபர் புடினுடனான சந்திப்பில் பேசியமை குறித்து மோடி தெரிவித்துள்ளதாவது:
உலகளாவிய பிரச்சினைகள் முக்கியமாக இடம்பெற்றன என்றும், அமைதிக்கான இந்தியாவின் வலுவான உறுதிப்பாடு, உக்ரைன் மோதலுக்கு அமைதியான, நீடித்த தீர்வு கண்டறிவதை மீண்டும் வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், பயங்கரவாத அச்சுறுத்தலை கூட்டாக எதிர்த்து போராட வேண்டியதன் அவசியத்தை இருவரும் பேசும்போது வலியுறுத்தினோம் என்றும், பல்வேறு விஷயங்களில் நெருக்கமாக பணியாற்றவும் ஒப்புக்கொண்டதாகவும் மோடி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நமது கலாசார மற்றும் மக்களின் இணைப்பே இந்தியா-ரஷ்யா இடையேயான நட்பின் முக்கிய பகுதியாகும் என்றும் தெரிவித்துள்ளதோடு, ரஷ்யாவில் இரண்டு புதிய இந்திய தூதரகங்கள் திறக்கப்பட்டதாலும், புனித புத்த நினைவுச் சின்னங்கள் சமீபத்திய காலங்களில் ரஷ்யாவிற்குச் சென்றதாலும் இந்த நட்பு வலுப்பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன், கல்வி, திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி போன்ற துறைகளிலும் மகத்தான ஆற்றல் உள்ளது என்றும் கூறியுள்ளார்.
அத்துடன், இன்றைய 23-வது உச்சி மாநாடு இருநாடுகளின் பல்வேறு அம்சங்களை விரிவாக விவாதிக்க வாய்ப்பாக அமைந்தது என்றும் கூறியுள்ளார். வர்த்தகம் மற்றும் முதலீட்டு இணைப்புகளை பன்முகப்படுத்த 2030-ஆம் ஆண்டு வரை ஒருங்கிணைந்து செயல்படுவது என நாங்கள் ஒப்புக்கொண்டு உள்ளோம் என்றும் தெரிவித்துள்ளதோடு, கப்பல் கட்டுமானம், எரிசக்தி, முக்கிய கனிமங்கள் உள்ளிட்டவற்றை மேலும் மேம்படுத்துவது பற்றி தாங்கள் பேசியுள்ளார்.

அத்துடன், உலக நாடுகள் இந்தியாவில் முதலீடுகள் செய்ய வேண்டும் என இந்தியா - ரஷ்யா இருநாடுகளின் வர்த்தக சபை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியுள்ளார். மேலும் இருநாட்டு மக்களின் சுற்றுலா விசாக்களில் பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
சுற்றுலா நிறுவனங்களுக்கு வணிக வாய்ப்புகளை உருவாக்கவும் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவும் நடவடிக்கை. எடுத்துள்ளதாவும், உலகின் திறன் மையமாக இந்தியா உருவெடுத்து வருகிறது என்றும் கூறியுள்ளார். மேலும், திறன் வாய்ந்த இளைஞர்களை இந்தியா கொண்டுள்ளதாகவும், கண்டுபிடிப்புகள், கூட்டு உற்பத்தி, கூட்டு உருவாக்கம் உள்ளிட்டவற்றில் ரஷ்யாவுடன் இணைந்து பயணிப்போம் என்றும் அறிவித்துள்ளார்.
அத்துடன், பரஸ்பர வர்த்தகத்தை அதிகரிப்பது மட்டுமன்றி, மக்களின் நலனை உறுதி செய்வதே எங்களின் நோக்கம் உலகளாவிய சவால்களுக்கு நிலையான தீர்வுகளை காண வேண்டும் என்றும், ரஷ்யாவுடன் தோளோடு தோள் நின்று செல்ல இந்தியா தயாராக உள்ளது எனவும் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியுள்ளார்.
English Summary
Prime Minister Modi says we will travel together with Russia in joint development and other areas