இண்டிகோ விமான சேவையில் பாதிப்பு குறித்து உயர்மட்ட விசாரணை தொடக்கம்..!
High level inquiry launched into impact on IndiGo flight services
இண்டிகோ விமான சேவையில் முன் எப்போதும் இல்லாத வகையில் கடுமையாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு விமானிகள் மற்றும் விமான ஊழியர்களுக்கான புதிய ஓய்வு விதிகளே காரணம் என்று கூறப்பட்டது.
இதையடுத்து, அந்த விதிகளை நிறுத்தி வைப்பதாக சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்த நிலையில், இண்டிகோ விமான சேவையில் ஏற்பட்ட இடையூறுகள் குறித்து உயர்மட்ட விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் தமது எக்ஸ் வலை தள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது;
'இண்டிகோ விமானங்களின் தாமதங்கள் மற்றும் ரத்துகளால் ஏற்படும் தொடர்ச்சியான இடையூறுகள் குறித்து உயர் மட்ட விசாரணையும் தொடங்கப்பட்டு உள்ளது. இதற்கான பொறுப்புகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு பிரச்னைகள் சரி செய்யப்படும்.
மேலும் எதிர்காலத்தில் ஏற்படும் இடையூறுகளைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். பயணிகளின் வசதி மற்றும் அவர்களின் பாதுகாப்பு அரசுக்கு என்றுமே முன்னுரிமையாக இருக்கிறது.' என்று அமைச்சர் ராம்மோகன் நாயுடு குறிப்பிட்டுள்ளார்.
English Summary
High level inquiry launched into impact on IndiGo flight services