இந்திய சினிமாவில் 5 பிரபலங்களின் தபால் தலையை வெளியிட்ட பிரதமர் மோடி...! - Seithipunal
Seithipunal


மும்பையில் இன்று, முதலாவது உலக ஒலி-ஒளி மற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநாடு நடந்தது. இதில் 'பிரதமர் நரேந்திர மோடி' வேவ்ஸ் மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றினார்.

பிரதமர் நரேந்திர மோடி:

அப்போது அவர் தெரிவித்ததாவது,"100-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்கள், கலைஞர்கள், புதுமையாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் ஒரே குடையின் கீழ் கூடியுள்ளனர்.

திறமை மற்றும் படைப்பாற்றல் கொண்ட உலகளாவிய சுற்றுச்சூழல் அமைப்பிற்கு நாங்கள் அடித்தளம் அமைத்து வருகிறோம்.வேவ்ஸ் என்பது ஒவ்வொரு கலைஞருக்கும் படைப்பாளிக்கும் சொந்தமான ஒரு உலகளாவிய தளமாகும்.வேவ்ஸ் உச்சி மாநாடு உலகளாவிய கவனத்தை ஈர்க்கிறது.

இந்தியா கோடிக்கணக்கான மக்கள் தொகை கொண்ட நாடாக இருப்பதோடு பில்லியன் கணக்கான கதைகளின் பூமியாகவும் உள்ளது.இந்தியாவை பிரபலப்படுத்துவதில் இந்திய சினிமா வெற்றிப்பெற்றுள்ளது.

இந்தியாவில் உருவாக்கு, உலகத்துக்காக உருவாக்கு என்பதற்கு இதுவே சரியான நேரம்" எனத் தெரிவித்தார்.மேலும், இந்திய சினிமாவில் 5 பிரபரலங்களின் தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டார்.

அதில் குருதத், பி.பானுமதி, ராஜ் கோஷ்லா, ரித்விக் கடக், சலீம் சவுத்ரி ஆகியோர்களின் தபால் தலை வெளியிடப்பட்டது. இந்த மாநாட்டில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான், மத்திய மந்திரி எல்.முருகன், நடிகர்கள் ரஜினிகாந்த், மகாராஷ்டிரா முதல்-மந்திரி பட்னாவிஸ்,அமீர்கான், ஷாருக்கான், மோகன்லால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Prime Minister Modi released postage stamps of 5 celebrities from Indian cinema


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->