பிரதமர் மோடிக்கு பிரேசிலின் உயரிய விருது!
Prime Minister Modi receives a prestigious award from Brazil
பிரேசில் அதிபரால் அந்நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது எனக்குமட்டுமல்ல 140 கோடி இந்தியர்களுக்கும் பெருமை என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
டிரினிடாட் அண்டு டுபாகோ ஆகிய 2 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி அந்த இரு நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேசினார்.அப்போது அவருக்கு 2 நாடுகளிலும் அந்நாடுகளின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதன்பின் அர்ஜென்டினாவுக்கு புறப்பட்டு சென்றார்.
3 நாடுகள் சுற்றுப்பயணத்திற்கு பின்னர், 6-ந்தேதிபிரேசில் நாட்டில் நடந்த 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார்.இதையடுத்து இந்த உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், கியூபா நாட்டின் ஜனாதிபதி மிகுவேல் டையஸ்-கேனல் ஆகியோரை பிரதமர் மோடி நேரில் சந்தித்து பேசினார்.
இதனை தொடர்ந்து, பிரேசிலின் ஜனாதிபதி லுலா அழைப்பின்பேரில், பிரேசில் தலைநகர் பிரேசிலியாவுக்கு அவர் சென்றார். அப்போது அவரை இந்திய வம்சாவளியை சேர்ந்த குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள் என பல்வேறு தரப்பினரும் கைகளில் தேசிய கொடிகளை ஏந்தியபடி வரவேற்றனர்.
இதனை தொடர்ந்து பிரேசில் அதிபர் லுலா டி சில்வாவை பிரதமர் மோடி சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில், பிரதமர் மோடிக்கு பிரேசிலின் உயரிய விருதான தி கிராண்ட் காலர் ஆப் தி நேஷன் ஆர்டர் ஆல் தி சவுதன் கிராஸ் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. பிரேசில் பயணத்தை முடித்தப்பின் பிரதமர் மோடி நமீபியா செல்கிறார்.
English Summary
Prime Minister Modi receives a prestigious award from Brazil