ராஜஸ்தான் மாநிலம் பல விளையாட்டு திறமைகளை நாட்டிற்கு வழங்கியுள்ளது - பிரதமர் மோடி பேச்சு.! - Seithipunal
Seithipunal


ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூரில் மகாகேல் விளையாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:- "ராஜஸ்தான் மாநிலத்தின் நிலம் இளைஞர்களின் உற்சாகத்திற்கும் திறமைக்கும் பெயர் பெற்றது. 

தற்போது, நாட்டில் தொடங்கியுள்ள விளையாட்டு போட்டிகள் மற்றும் விளையாட்டு மகாகும்பத் தொடர், ஒரு பெரிய மாற்றத்தின் பிரதிபலிப்பு ஆகும். சன்சாத் விளையாட்டுப் போட்டியின் மூலம் ராஜ்யவர்தன் ரத்தோர் திரும்பி வருவது இளம் தலைமுறையினருக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. 

ராஜஸ்தான் மாநிலம் பல விளையாட்டு திறமைகளை இந்தியாவிற்கு வழங்கி உள்ளது. அதன் படி, இளைஞர்கள் நிறைய பதக்கங்களை வென்று மூவர்ணத்தின் பெருமைகளை மேம்படுத்தி உள்ளனர். ஜெய்ப்பூர் நகர் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஒருவரை எம்.பி.யாகவும் தேர்வு செய்தது. 

நாட்டில் ஏற்பட்டுள்ள பணத் தட்டுபாடால் இளைஞர்கள் பின் தங்கி விடக்கூடாது என்பதில் அரசு தனிக்கவனம் செலுத்தி வருகிறது. நாட்டில் மாவட்ட அளவில் விளையாட்டுத்துறையின் உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது" என்று அவர் பேசினார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

prime minister modi participate in Mahakal Sports Festival in rajasthan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->