மேற்கு ஆசியா, உக்ரைன் மோதல்களுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்; பிரதமர் மோடி வலியுறுத்தல்..! - Seithipunal
Seithipunal


நார்வே நாட்டுக்கு அரசுமுறைப் பயணமாக சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோருடன் இருதரப்பு உறவு தொடர்பாக விரிவான பேச்சுவார்த்தையை மேற்கொண்டுள்ளார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளதாவது;

இந்தியாவும் நார்வேயும் விதிகள் அடிப்படையிலான ஒழுங்கு, பேச்சுவார்த்தை, ராஜதந்திரம் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும், எந்தவொரு பிரச்சினையையும் ராணுவ மோதல் மூலம் மட்டும் தீர்க்க முடியாது என்பதில் நாங்கள் ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ளோம் என்று குறிப்பிட்டுளாளர்.

அத்துடன், உக்ரைனாக இருந்தாலும் சரி, மேற்கு ஆசியாவாக இருந்தாலும் சரி மோதலை விரைவில் முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்றும், அமைதியை நிலைநாட்டவும் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு முயற்சிக்கும் நாங்கள் தொடர்ந்து ஆதரவு அளிப்போம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், வளர்ந்து வரும் உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதற்கு, உலகளாவிய நிறுவனங்களைச் சீர்திருத்துவது அவசியம் என்ற விஷயத்திலும் நாங்கள் உடன்படுவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் வேரோடு ஒழிப்பது நமது பகிரப்பட்ட உறுதிப்படாகும் எனவும்,  ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஆண்டு நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் உட்பட 26 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் நார்வே இந்தியாவுக்கு அளித்த ஆதரவு பாராட்டுக்குரியது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், தான் கடந்த ஆண்டே நார்வே வருவதாக இருந்ததாகவும், ஆனால், பஹல்காம் தாக்குதல் காரணமாக அந்த பயணத்தை ஒத்திவைக்க வேண்டிய நிலை. அந்த இக்கட்டான நேரத்தில் நார்வே பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுடன் உறுதியாக நின்று, உண்மையான நட்பை வெளிப்படுத்தியது. இன்று நான் நார்வேக்கு வருகை தரும்போது அந்த ஒற்றுமைக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று மோடி தனது நன்றியை கூறியுள்ளார்.

மேலும், இந்தியா தலைமையிலான இந்தோ - பசுபிக் பெருங்கடல் முன்முயற்சியில் இணைய நார்வே முடிவு செய்துள்ளதாகவும்,  இரண்டு முக்கிய கடல்சார் நாடுகளான இந்தியாவும் நார்வேயும் கடல்சார் பொருளாதாரம், கடல்சார் பாதுகாப்பு மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்த நாங்கள் இணைந்து பணியாற்றுவோம் என்றும் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த சந்திப்பின்போது, நார்வே தனது உயரிய விருதான ராயல் வார்வேயன் ஆர்டர் ஆஃப் மெரிட் இன் கிராண்ட் கிராஸ் விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது. குறித்த விருதினை நார்வே மன்னர் ஹரால்டு வி வழங்கினார். பிரதமர் நரேந்திர மோடி பெறும் 32வது சர்வதேச விருது இது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Prime Minister Modi emphasizes that conflicts in West Asia and Ukraine must be resolved through dialogue


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->