'தலித் பெண்கள் பலவீனமானவர்கள் இல்லை. மிகவும் வலிமையானவர்கள்'; ரூத் மனோரமா பேச்சு..!
Ruth Manorama states that Dalit women are not weak
தேசிய தலித் மகளிர் கூட்டமைப்பின் சார்பில் 'தலித் பெண்ணிய சகோதரத்துவ கருத்தரங்கம்' பெங்களூருவில் மே 14-ஆம் தேதி தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக நாளை மே 19-ஆம் தேதிவரை நடைபெறும் இந்த கருத்தரங்கில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ரூத் மனோரமா, ஜோதி ராஜ், பிரியங்கா சாமி மற்றும் நேபாளத்தை தலித் பெண்ணிய செயற்பாட்டாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த கருத்தரங்கில் பேசிய ரூத் மனோரமா தெரிவித்ததாவது;
''கடந்த 50 ஆண்டுகளாக அரும்பாடுபட்டு தேசிய அளவில் தலித் பெண்கள் கூட்டமைப்பை நடத்தி வருகிறோம். சமூகத்தின் பின்தங்கிய வகுப்பினருக்கான அமைப்பை கட்டமைப்பதிலும், அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு எதிராக போராடுவதிலும் இந்த அமைப்பு மிகுந்த சவால்களுக்கு மத்தியில் உறுதியாக செயல்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தலித் பெண்கள் ஆணாதிக்கம், சாதி கொடுமை, வன்முறை, புறக்கணிப்பு என பல தளங்களிலும் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள் என்றும் கவலை வெளியிட்டுள்ளார்.

மேலும், இந்த பெண்களை ஒருங்கிணைத்து தலைமைத்துவ பயிற்சிகளை கொடுத்து பாபாசாகேப் அம்பேத்கரின் வழியில் பயணிக்கச் செய்கிறோம் என்றும், அவரது கூற்றின்படி கல்வியை புகட்டி, போராட்டம் நடத்தி, அனைவரையும் ஒன்றிணைத்து வலுவான சக்தியாக மாற்றி வருகிறோம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், தலித் பெண்கள் ஒருபோதும் பலவீனமானவர்கள் இல்லை. அவர்கள் மிகவும் வலிமையானவர்கள். மூங்கில் போன்று வளைந்து கொடுத்தாலும், ஒருபோதும் முறிந்துவிட மாட்டார்கள். என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே தலித் பெண்களை அமைப்புகளாக உருவாக்கி, புதிய விஷயங்களை கற்றுக்கொண்டு சமூக மாற்றத்துக்கு உழைக்க அழைப்பு விடுக்கிறேன் என்று ரூத் மனோரமா பேசியுள்ளார்.
English Summary
Ruth Manorama states that Dalit women are not weak