எதிர்க்கட்சித் தலைவர்கள் பற்றி ஒரே வார்த்தையில் பிரதமர் மோடி விளாசல்! - Seithipunal
Seithipunal


புது டெல்லி: எதிர்க்கட்சித் தலைவர்கள் நாட்டின் நலனைக் காட்டிலும், அவர்களது தனிப்பட்ட நலன் குறித்து முக்கியத்துவம் கொடுப்பதாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சனம் செய்துள்ளார்:

பெங்களூருவில், மக்களவைத் தேர்தலை பாஜகவை எதிர்கொள்ள 26 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் ஒருங்கிணைந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி எதிர்க்கட்சித் தலைவர்கள் குறித்து கருத்துத் வெளியிட்டுள்ளார்.

அதில் வாரிசு அரசியலை ஊக்குவிக்கும் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒன்றாக சேர்ந்திருப்பதாகக் தெரிவித்த பிரதமர் மோடி, எதிர் கட்சி தலைவர்கள் அனைவருமே 'குடும்பத்தால், குடும்பத்துக்காக' என்று வாழ்வதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். 

அதனை தொடர்ந்து, இவர்களுக்கு குடும்பம்தான் முதலில் முக்கியமாகும். தேசம் எல்லாம் முக்கியமேயில்லை, ஊழலை ஊக்குவிப்பதற்காகவே இவர்கள் ஒன்றுகூடியிருக்கிறார்கள் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

வருகின்ற 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க வுக்கு எதிராக ஒருங்கிணைந்த கூட்டணியை அமைக்க கடந்த மாதம் எதிர்க்கட்சிகள் பாட்னாவில் ஆலோசனை நடத்தின.

இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இரண்டாம் கட்ட ஆலோசனைக் கூட்டம்  காங்கிரஸ், திமுக உள்பட 26 எதிர்க்கட்சித்தலைவர்கள் ஒருங்கிணைந்து திங்கள், செவ்வாய் என இரண்டு நாட்கள் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Prime minister Modi criticizes opposition leaders


கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?Advertisement

கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?
Seithipunal
--> -->