இன்று பெங்களூரு வருகிறார் பிரதமர் மோடி.!!
prime minister modi come in banglore
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் சல்லகட்டா முதல் ஒயிட்பீல்டு வரை ஊதா நிறப்பாதையிலும், சில்க் நிறுவனத்தில் இருந்து மாதவரா வரை பசுமை நிறப்பாதையிலும் 76 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த பசுமை நிறப்பாதையில் உள்ள ஆர்.வி.ரோடு மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து பொம்மசந்திரா வரை சுமார் 19.15 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிதாக மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கான பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், மஞ்சள் நிறப்பாதையில் 10-ந்தேதி மெட்ரோ ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைப்பார் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி பத்தாம் தேதியான இன்று பிரதமர் மோடி பெங்களூருவுக்கு வந்து மஞ்சள் நிறப்பாதையில் மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைக்கிறார்.
இதனை முன்னிட்டு பிரதமர் மோடி இன்று தனி விமானம் மூலம் காலை 10.30 மணிக்கு பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு வருகிறார். அங்கிருந்து கார் மூலம் பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்திற்கு வரும் அவர், பெங்களூரு-பெலகாவி இடையே வந்தேபாரத் ரெயில் சேவையை தொடங்கி வைக்கிறார். அதைத்தொடர்ந்து சாலை மார்க்கமாக மஞ்சள் நிறப்பாதையில் உள்ள ராகிகுட்டா மெட்ரோ ரெயில் சேவையை பச்சை கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார்.
அதன் பிறகு பிரதமர் மோடி ஜே.பி.நகர் 4-வது பிளாக்கில் இருந்து கடபுகெரே வரையிலான 3-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்த நிகழ்ச்சி அனைத்தையும் முடித்துக் கொண்டு பிரதமர் மோடி மதியம் மூன்று மணியளவில் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
பிரதமர் மோடி வருகையையொட்டி பெங்களூருவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் ஐந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
English Summary
prime minister modi come in banglore