பேச்சுவார்த்தைக்கு தயார்.. பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி சொல்கிறார்..இந்தியாவின் நிலைப்பாடு என்ன? - Seithipunal
Seithipunal


போரை நிறுத்த அமெரிக்காவின் தலையீட்டை இந்தியா ஏற்கவில்லை என்றும் பாகிஸ்தான் கூறியுள்ளது.அதுமட்டுமல்லாமல் இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளோம் என்று  பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி இஷாக் தார் தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலையடுத்து இந்தியா-பாகிஸ்தான் ராணுவங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.இதில் பாகிஸ்தானில் உள்ள விமானப்படை தளங்கள் மற்றும் ராணுவ நிலைகளை இந்தியா தாக்கியது. மேலும் பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சிகளை இந்தியா முறியடித்தது. 4 நாட்கள் சண்டைக்கு பிறகு இரு நாடுகள் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது.

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான மோதலை நான் பேச்சுவார்த்தை மூலம் நிறுத்தினேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். ஆனால், அதை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது. பாகிஸ்தான் கெஞ்சியதால் தான் தாக்குதலை நிறுத்தினோம்; இதில் மூன்றாவது நாடு தலையீடு இல்லை என்று இந்தியா தெரிவித்தது. ஆனாலும், டிரம்ப் தனது கருத்தை தொடர்ந்து கூறி வருகிறார். இந்த நிலையில், போரை நிறுத்த அமெரிக்காவின் தலையீட்டை இந்தியா ஏற்கவில்லை என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி இஷாக் தார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:“அமெரிக்க வெளியுறவு செயலர் ரூபியோ மூலம் எனக்கு மே 11ஆம் தேதி போர் நிறுத்தம் குறித்த தகவல் வந்தது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் ஒரு பொதுவான இடத்தில் விரைவில் பேச்சுவார்த்தை இருக்கும் என்று எனக்கு சொல்லப்பட்டது. ஜூலை 25ஆம் தேதி வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவு செயலர் மார்கோ ரூபியோவை நான் சந்தித்தேன். அப்போது மோதல் தொடர்பாக இந்தியா–அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தையின் நிலை குறித்து அவரிடம் கேட்டேன். ஆனால் இது ஒரு இருதரப்பு பிரச்சினை என்று இந்தியா கூறியதாக ரூபியோ பதிலளித்தார்.”இந்தியா எந்த மூன்றாம் தரப்பு தலையீட்டையும் திட்டவட்டமாக நிராகரித்தது.

இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது. அதில் பயங்கரவாதம், வர்த்தகம், பொருளாதாரம், ஜம்மு–காஷ்மீர் உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் இடம்பெற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Prepared for negotiation says the Pakistan Foreign Minister what is Indias position?


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->