பட்ட காயத்தைப் பொருட்படுத்தவி்ல்லை….! விடுமுறையைக் கேன்சல் செய்து விட்டு, போருக்குப் புறப்பட்ட தளபதி…! இவர் தாங்க உண்மையிலே தளபதி…! - Seithipunal
Seithipunal


 

காஷ்மீரில் நடைபெற்ற தற்கொலைப்படைத் தாக்குதலில், இந்திய சி.ஆர்.பி.எப். வீரர்கள் 40 பேர் கொல்லப் பட்டனர். இதனால், அந்த தீவிரவாதிகளைப் பழி வாங்குவதற்காக, கடும் கோபத்துடன், நமது எல்லை வீரர்கள் களம் இறங்கி உள்ளனர்.

அந்த தீவிரவாதிகளைத் தேடினர்.

இந்த நிலையில், புல்வாமா பகுதியில், தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து, ராணுவம் அவர்களைச் சுற்றி வளைத்தது. அவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. பதிலுக்கு தீவிரவாதிகளும், துப்பாக்கியால் சுட்டனர்.

இதில், பிரிகேடியர் ஹர்பீர்சிங் காயமடைந்தார். இதனால் அவருக்கு சிகிச்சை அளிக்கப் பட்டது. அவர் விடுமுறையில் ஓய்வில் இருந்தார்.

அவர் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த வேளையில், நள்ளிரவில், தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் தொடங்கப் பட்டதை அறிந்து, தன் காயத்தைப் பொருட் படுத்தாமல், தன் விடுமுறையையும் ரத்து செய்து விட்டு, தாக்குதல் நடந்த இடத்திற்கு விரைந்தார்.

அந்தப் படைக்கு ஹர்பீர்சிங் தான் தளபதி. எனவே, ஹர்பீர் தன் காயத்தைப் பொருட் படுத்தாமல், துப்பாக்கியை ஏந்தி முன்னால் சென்றார்.

இதனால், உத்வேகம் அடைந்த நம் வீரர்கள் முன்னேறிச் சென்று தாக்குதல் நடத்தி தீவிரவாதிகளைக் கொன்று குவித்தனர். அதில் நமது வீரர்கள் 5 பேர் வீர மரணம் அடைந்தனர்.

தனக்கு ஏற்பட்ட படுகாயத்தையும் பொருட் படுத்தாது, தீவிரவாதிகளுடன் போர் புரிந்து வரும் தளபதி ஹர்பீர் சிங்கிற்கு, இந்தியாவின் பல பகுதிகளிலும் உள்ள  மக்கள் தங்கள் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

precadier cancelled the leave and placed in war


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->