இன்று இந்தியாவின் முதல் பெண் குடியரசு தலைவர் பிறந்த தினம்..!!
pratibha patil birthday 2019
பிரதீபா பாட்டில்:
இந்தியாவின் முதலாவது பெண் குடியரசுத் தலைவர் திருமதி.பிரதீபா தேவிசிங்க் பாட்டில் அவர்கள் மகாராஷ்டிராவிலுள்ள ஜல்கோன் மாவட்டத்தில் இருக்கும் நத்கோன் என்ற கிராமத்தில் 1934ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி பிறந்தார்.
இவர் ஜல்கோன் மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு பயிற்சி வழக்கறிஞராக தனது வாழ்க்கையை தொடங்கினார். இவரது 27வது வயதில், ஜல்கோன் சட்டமன்ற தொகுதியிலிருந்து, மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நான்கு ஆண்டுகள் தொடர்ச்சியாக, இவர் எட்லாபாத் (முக்தாய் நகர்) தொகுதியில் இருந்து எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர், அரசின் பல்வேறு பதவிகளிலும், மகாராஷ்டிரா சட்டமன்றத்திலும் வௌ;வேறு பதவிகள் வகித்துள்ளார்.
1967ஆம் ஆண்டு முதல் 1972ஆம் ஆண்டு வரை, கல்வித் துணை அமைச்சராகப் பணியாற்றிய இவர், பொது சுகாதாரத்துறையிலிருந்து சுற்றுலாத்துறை, பாராளுமன்ற விவகாரத்துறை போன்ற பல அமைச்சர் பதவிகளையும் வகித்துள்ளார்.
இவர் 2004ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி அன்று ராஜஸ்தான் கவர்னராகப் பொறுப்பேற்று, 2007ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி வரை அப்பதவியில் இருந்தார். பின்பு 2007ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி முதல் 2012ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி வரை இந்தியாவின் குடியரசு தலைவராகப் பதவி வகித்துள்ளார்.
English Summary
pratibha patil birthday 2019