பரபரப்புக்கு மத்தியில் பதவியை ராஜினாமா செய்த பிரபுல் பட்டேல் - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் பிரபுல் பட்டேல் மாநிலங்களவை எம்.பி.யாக கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் ஐந்தாவது முறையாக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் கடந்த ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டதையடுத்து சரத் பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார் கட்சியில் தனக்கென்று ஒரு அணியை பிரித்துக் கொண்டு செயல்பட்டார்.

கட்சியின் பெரும்பாலான எம்.எல்.ஏ.-க்கள் தன்னுடன் இருப்பதாக கூறிக்கொண்டு ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான ஆட்சியில் இணைந்து துணை முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். அவரது ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் சில மாநில அமைச்சராக பதவி ஏற்றனர்.

அஜித் பவாருடன் பிரபுல் பட்டேல் இணைந்து செயல்பட்டார். தேர்தல் ஆணையம் தேசியவாத காங்கிரஸ் கட்சி அஜித் பவார் அணிக்கே சொந்தம் என அறிவித்தது. மகாராஷ்டிரா மாநில சபாநாயகரும் அதை உறுதிப்படுத்தினார்.

இதையடுத்து சரத் சந்திரா பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். பின்னர் சரத் பவார் பிரபுல் பட்டேலை மாநிலங்களவை எம்.பி. பதவியில் இருந்து பதவி நீக்கம் செய்ய வேண்டும் மனு அளித்திருந்தார்.

இந்த நிலையில் தான் பிரபுல் பட்டேல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இன்னும் நான்கு ஆண்டுகள் பதவிக் காலம் உள்ள நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அரவது ராஜினாமா கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது விரைவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மாநிலங்களவை எம்.பி.க்கான இடம் காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிக்க இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

praful patel resign mp posting


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->