புதுச்சேரியில் மதுபானங்கள் விலை உயர்வு - புதுச்சேரி கலால்துறை அறிவிப்பு.!
Pondicherry Liquor Price increased form Tomorrow 14 July 2021 Announcement
இன்றுள்ள இளம் தலைமுறை முதல் சிறார்கள் வரை மதுபானத்தை அருந்தி சீரழிந்து இருக்கின்றனர். இவற்றில் உள்ளூர் மதுபானத்திற்கு ஒரு மதிப்பும், வெளியூர் மதுபானத்திற்கு ஒரு மதிப்பும் என அவர்களுக்குள் பாசாங்கு செய்து மதுபானம் அருந்தி வருகின்றனர்.
தமிழகத்தை பொறுத்த வரையில் புதுச்சேரி மதுபானம் என்றால் அதற்கென தனி மதிப்பு வைத்து, அங்கு நண்பர்கள் பழக்கம் ஏற்பட்டால் அவர்களிடம் கெஞ்சி கூத்தாடி மதுபானம் வாங்கி அருந்துகிறார். புதுச்சேரி மாநிலத்தை சுற்றியுள்ள தமிழக மாவட்டத்தினரோ இன்னும் ஒருபடி மேலே சென்று அங்கேயே சென்று மதுபானம் அருந்தி வருவார்கள். காரணம் அங்குள்ள மதுபானத்தை விலை குறைவு, தரம் நியாயமான முறையில் கிடைக்கும் என தெரிவிப்பார்கள்.

இந்நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் மதுபானங்களின் விலை 20 விழுக்காடு உயர்த்தப்படுவதாக புதுச்சேரி மாநில கலால் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நாளை முதல் அனைத்து வகை மதுபானங்களின் விலை 20 விழுக்காடு உயர்த்தி விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Pondicherry Liquor Price increased form Tomorrow 14 July 2021 Announcement