எமனாக மாறிய காவல் அதிகாரி.. போலிஸ் காரிலேயே அமர்ந்து அரங்கேற்றிய சம்பவம்... வைரலாகும் வீடியோ காட்சிகள்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கரோனா வைரஸின் தாக்கமானது தினமும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கரோனா வைரஸ் சமூக தொற்றாக மாறாமல் இருக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தினமும் கரோனாவின் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. 

ஊரடங்கின் காரணமாக மக்கள் வெளியே அனாவசியமாக வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும் என்றும், வெளியே வரும் போது முகக்கவசம் மற்றும் சானிடைசரால் கைகழுவுதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

காவல் துறையினரும் ஊரடங்கின் காரணமாக தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், தங்களுக்கு தெரிந்த முறைகளில் காவல் துறை அதிகாரிகளும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். 

இந்தியாவின் மத்திய பிரதேசம் மாநிலத்தில் கரோனா வைரஸின் தொற்றுக்கு 1310 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 69 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 69 பேர் பூரண நலனுடன் இல்லத்திற்கு திரும்பியுள்ளனர். 

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூரில் காவல்துறை அதிகாரி எம தர்மன் போல வேடமிட்டு, காரில் அமர்ந்து கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police getup change to Yema create awareness about corona virus


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->