ஆற்றின் ஓரம் மிதந்த மனித உடல் - வெற்றி துரைசாமியின் உடலா? பரபரப்பில் போலீசார்.! - Seithipunal
Seithipunal


சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயராக இருந்த சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி தனது நண்பர் கோபிநாத் என்பருடன் இமாச்சலப் பிரதேச மாநிலத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு அவர்கள் இருவரும் சிம்லா நோக்கி இன்னோவா காரில் சென்று கொண்டிருந்தனர். 

இந்த காரை உள்ளூரைச் சேர்ந்த தன்ஜின் என்பவர் ஓட்டியுள்ளார். அதன் படி, இந்த கார் சட்லஜ் நதி வழியாக சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் ஓட்டுநர் தன்ஜின் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், கோபிநாத் காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் வெற்றி துரைசாமி மட்டும் மாயானார். அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில், சில நாட்களாக நடைபெற்ற தேடுதலில் ஆற்றின் கரை ஓரம் இருந்த பாறையில் மனித உடல்பகுதி கிடைத்துள்ளதாகவும், அது காணாமல் போன வெற்றி துரைசாமியின் உடல் பாகமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் டி.என்.ஏ. பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக அம்மாநில போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

police found body in himachal pradesh river


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->