மதுபோதையில் காரை இயக்கிய காவல் அதிகாரி.. பெண்ணின் மீது ஏற்றி சென்ற கொடூரம்.. பதைபதைப்பு வீடியோ..!! - Seithipunal
Seithipunal


மதுபோதையில் விபத்துகள் ஏற்படுவது இன்றளவு பெரும் தொடர்கதையாகியுள்ளது. தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக பல விபத்துகள் அரங்கேறாமல் உள்ள சூழ்நிலையில், டெல்லியில் மதுபோதையில் காரை இயக்கி அரங்கேறிய விபத்து தொடர்பான பதைபதைப்பு வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. 

டெல்லியில் உள்ள சில்லா கிராமத்தை சார்ந்த பெண்மணி, தனது கணவருடன் நேற்று அங்குள்ள சந்தை பகுதிக்கு சென்றுள்ளார். இந்த நேரத்தில், இவர்கள் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருக்கவே, எதிர் திசையில் கட்டுப்பாட்டை இழந்தவாறு கார் வந்துள்ளது.

இந்த கார் தம்பதியின் மோட்டார் சைக்கிள் மீது மோதவே, பின்னால் வந்த மற்றொரு இரு சக்கர வாகனத்தில் மோதி பெண்மணி காருக்குள் அடியில் விழுந்துள்ளார். போதையில் இருந்த கொடூரன் தொடர்ந்து காரை இயக்கவே, பெண்மணியின் மீது கார் ஏறி இறங்கியது. 

பின்னர் பொதுமக்கள் கொடூரனை பிடித்து அடித்து, காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட பெண்மணியை அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், மதுபோதையில் கார் இயக்கிய கொடூரனை கைது செய்துள்ளனர். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police arrest drinking culprit make accident


கருத்துக் கணிப்பு

முதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..
கருத்துக் கணிப்பு

முதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..
Seithipunal