2025 -ஆம் ஆண்டுக்கான காவல்துறை, நீதி வழங்கல் செயல்பாடு அறிக்கை: டாப் 05 இடங்களை பெற்றுள்ள தென் மாநிலங்கள்..!
Police and Justice Delivery Performance Report 2025 Southern states in top 05 positions
காவல்துறை மற்றும் நீதி வழங்கல் செயல்பாடு தொடர்பில் 2025-ன் நீதித்துறை நான்காவது அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில் தென் மாநிலங்கள் முதல் 05 இடங்களை பிடித்துள்ளன. இந்த பட்டியலில் மேற்கு வங்கம் கடைசி இடத்தில் உள்ளதாக, இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதியின் நான்கு தூண்களான, காவல்துறை, சிறைச்சாலைகள், நீதித்துறை மற்றும் சட்ட உதவி மீதான மாநிலங்களின் செயல்திறன் தரவரிசைக்கு பரிசீலிக்கப்பட்டது. அதன்படி குற்றங்களை எதிர்த்துப் போராடுவதிலும், நீதி வழங்குவதிலும் மாநிலங்கள் எப்படி செயல்படுகின்றன என்பது குறித்து இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

2025-நீதித்துறை 04-வது அறிக்கையின் படி, தென் மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகியவை டாப் 05 இடங்களை பிடித்துள்ளது. இதில் மேற்கு வங்கம் கடைசி இடத்தை பிடித்துள்ளது.
அறிக்கையின் படி, ராஜஸ்தான், கேரளா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் நீதித்துறை செயல்பாட்டில் முன்னேற்றம் கண்டுள்ளன. அத்துடன், சிறைத்துறை செயல்பாட்டில் ஜார்க்கண்ட், ஒடிசா மாநிலங்களும் முன்னேற்றம் கண்டுள்ளன. மேலும், சட்ட உதவி வழங்குவதில் ஹரியானா மாநிலம் முன்னேற்றம் கண்டுள்ளது. காவல்துறை மற்றும் நீதி வழங்கல் செயல்பாட்டில், ஏழு சிறிய மாநிலங்களில், சிக்கிம் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது. இதில், கோவா பின்தங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
English Summary
Police and Justice Delivery Performance Report 2025 Southern states in top 05 positions