விழா சந்தையில் விஷத்துப்பாக்கி! 125 சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதி..! நடந்து என்ன...?
Poisonous gun at festival market 125 children admitted to hospital What happened
கடந்த 20-ந்தேதி தீபாவளி பண்டிகை பெரும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்ட நிலையில், மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் சந்தைகளில் புதிய ரக “தீபாவளி துப்பாக்கி” எனும் வித்தியாசமான பட்டாசு விற்பனைக்கு வந்தது. இந்த துப்பாக்கி சாதாரண விளையாட்டு பொருள் அல்ல, ‘கால்சியம் கார்பைட்’ என்ற ஆபத்தான ரசாயனத்தால் இயங்கக்கூடியது.

இந்த ரசாயனத்தை தண்ணீருடன் கலக்கும்போது அசிட்டிலின் வாயு உருவாகி, அதனால் மிகப்பெரிய வெடி சத்தம் உண்டாகும். குழந்தைகள் இதை விளையாட்டாக பயன்படுத்தியதில், ஆபத்தான விளைவுகள் ஏற்பட்டன. தகவலின்படி, சுமார் 125 குழந்தைகள் கண் எரிச்சல், பார்வை மங்கல் மற்றும் தலைவலி போன்ற பாதிப்புகளால் அவதிப்பட்டனர்.
உடனடியாக அவர்கள் போபால் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு கண் மருத்துவர் டாக்டர் ஹேமலதா யாதவ் தெரிவித்ததாவது,“இந்த துப்பாக்கியில் இருந்து வெளிவரும் அசிட்டிலின் வாயு ஒரு ரசாயன வெடிகுண்டைப் போலவே செயல்படுகிறது. இதை சுவாசிப்பது உடல்நலத்திற்கு மிகப்பெரிய ஆபத்தாகும்"என்றார்.
இதையடுத்து மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கையில் இறங்கி, போபாலின் முக்கிய சந்தைகளில் சிறப்பு சோதனைகள் நடத்தியது. அப்போது, புதிய ரக தீபாவளி துப்பாக்கிகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன.மேலும், பட்டாசு கொண்டாட்டத்தின் மகிழ்ச்சியை சோகமாக்கிய இந்த சம்பவம், பெற்றோர்களிடையே பெரும் பீதி மற்றும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Poisonous gun at festival market 125 children admitted to hospital What happened