பழங்குடி சமூகத்தை காங்கிரஸ் புறக்கணித்துவிட்டது - பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் மக்களவைத் தேர்தல் வரும் 19-ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் பதிவு செய்யப்படும் வாக்குகள், ஜூன் 4-ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அதன் படி சத்தீஸ்கர் மாநிலத்தில் பஸ்தார் பகுதியில் தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி பங்கேற்று பாஜக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது: ”ராமர் கோயில் விவகாரத்தில் 500 ஆண்டுகளுக்கு பிறகு கனவு நனவாகியுள்ளது. ராமர் சிலை பிரதிஷ்டை நிகழ்வை காங்கிரஸ் கட்சி புறக்கணித்தது. இந்த முடிவு தவறானது என்று கூறிய காங்கிரஸ் தலைவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். சுதந்திரத்திற்குப் பிறகு, நாட்டைக் கொள்ளையடிக்கும் உரிமம் இருப்பதாக காங்கிரஸ் நினைத்தது. ஆனால் 2014இல் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, காங்கிரஸின் கொள்ளை உரிமத்தை ரத்து செய்தோம்.

நீங்கள் மோடிக்கு உரிமம் கொடுத்ததால் உரிமத்தை மோடி ரத்து செய்ய முடிந்தது. இப்போது அவர்களின் கடை மூடப்பட்டுவிட்டது. இதனால் அவர்கள் மோடியை திட்டுவார்களா இல்லையா? அப்படியானால் என்னை யார் பாதுகாப்பார்கள்? இந்த கோடிக்கணக்கான என் நாட்டு மக்கள், என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகள், இன்று எனது பாதுகாப்பாக மாறியுள்ளனர்.

பழங்குடி சமூகம் எப்போதுமே காங்கிரஸ் கட்சியால் அவமதிக்கப்பட்டது. அதே பழங்குடி சமூகத்தின் மகள் இன்று நாட்டின் குடியரசுத் தலைவராக இருக்கிறார். சத்தீஸ்கருக்கு முதல் பழங்குடியின முதல்வரை பாஜக அளித்துள்ளது. பழங்குடியினருக்கு என தனி அமைச்சகம் மற்றும் தனி பட்ஜெட்டை பாஜக உருவாக்கியுள்ளது, பழங்குடியினர் நலனுக்கான பட்ஜெட் கடந்த 10 ஆண்டுகளில் 5 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது” என்றுத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pm modi speech in election campaighn


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->