கடவுள் ஜெகநாதர் மீதான பக்தியால், டிரம்பின் அழைப்பை நிராகரித்தேன்: பிரதமர் மோடி பேச்சு..! - Seithipunal
Seithipunal


கடவுள் ஜெகநாதர் மீதான பக்தி காரணமாக இந்த மண்ணுக்கு வர வேண்டும் என்பதற்காக , அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அழைப்பை நிராகரித்தேன் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

ஒடிசாவில் பா.ஜ., ஆட்சி அமைத்து ஓராண்டு நிறைவு பெற்றதை கலந்து கொண்டு பேசினார். அப்போது, ஜூன் 20 என்பது சிறப்பான நாள். இங்கு பா.ஜ., தலைமையிலான ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவு பெறுகிறது. இன்று நடப்பது சிறந்த நிர்வாகம் மற்றும் பொது சேவைக்கு அர்ப்பணிக்கப்பட்டதற்கான கொண்டாட்டம் என தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, காங்கிரஸ் மாடல் ஆட்சியில் சிறந்த நிர்வாகமோ அல்லது சாமானிய மக்கள் எளிதாக வாழ்வதற்கான வழிமுறை ஏதும் இருந்தது இல்லைன. அப்போதில் இருந்து, வளர்ச்சி திட்டங்களை தாமதப்படுத்துவதும், ஊழலை வளர்ப்பதுமே காங்கிரஸ் மாடலின் அடையாளமாக இருந்தது. ஆனால், சமீப நாட்களாக நாடு பா.ஜ., வின் வளர்ச்சி மாடலை பார்த்து வருகிறதாகவும், காங்கிரஸ் ஆட்சியில் இந்தியாவில் நல்லாட்சி நடக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய மோடி அங்கு குறிப்பிட்டுள்ளதாவது: இரண்டு நாட்களுக்கு முன்பு ஜி7 மாநாட்டுக்காக தான் கனடா சென்ற போது, அமெரிக்க அதிபர் டிரம்ப், தொடர்பு கொண்ட கனடா வந்துள்ளீர்கள். வாஷிங்டன் வழியாக நாடு திரும்புமாறு கூறினார். விருந்து மற்றும் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்தார்.

ஆனால், நான் அவரிடம் உங்கள் அழைப்புக்கு நன்றி..என்று கூறியதாகவும், புனிதமான ஜெகநாதரின் நிலத்திற்கு வர வேண்டும் என்ற காரணத்திற்காக டிரம்ப்பின் அழைப்பை பணிவாக மறுத்தேன் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், உங்களின் அன்பும், ஜெகநாதர் மீதான பக்தியுமே என்னை இந்த மண்ணிற்கு வரவழைத்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஒடிசாவில் பா.ஜ., ஆட்சி அமைத்தததும், பிரதமர் மோடி அங்கு செல்வது இது 06-வது முறையாகும். இன்று நடந்த விழாவில் பிரதமர் மோடி ரூ.18,600 கோடி மதிப்பிலான 105 திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார். அங்கு கிராமப்புற சாலை, பாலங்கள், தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில்வே கட்டமைப்பு திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார்.

அத்துடன், பயணிகள் ரயில் ஒன்றையும், புதிய ரயில் வழித்தடத்தையும் தொடங்கிவைத்துள்ளதோடு, தலைநகர பிராந்திய நகர்ப்புற போக்குவரத்து திட்டங்களின்படி 100 மின்சார பஸ்களையும் தொடங்கி வைத்து, ஒடிசாவின் வளர்ச்சி குறித்த ஆவணத்தையும் வெளியிட்டார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PM Modi says he rejected Trumps invitation due to his devotion to Lord Jagannath


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->