பிரதமர் மோடிக்கு நோபல் பரிசு வழங்க கோரிக்கை.. மும்பை பங்குச் சந்தை தலைவர்.! - Seithipunal
Seithipunal


பிரதமர் மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என மும்பை பங்குச்சந்தை தலைமை அதிகாரி ஆஷிஷ் சவுகான் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் நிறுவன பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற மும்பை பங்குச் சந்தையின் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷிஸ் சவுகான் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரதமர் மோடி அரசு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக கையாண்டு வருகிறது. மேலும், கொரோனா காலத்தில் 80 கோடி மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்களை வழங்கியதற்காக நாங்கள் மோடி அரசுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

பிரதமரின் இலவச ரேஷன் திட்டம் இந்திய ஏழை குடிமக்களை கொரோனா பாதிப்பு சோதனைக் காலத்தில் காப்பாற்றியுள்ளது. இப்போதும் கூட இது ஒரு நம்ப முடியாத மிகப்பெரிய பணியாகும்.

இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இலவச உணவு பொருள் வழங்க பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை முழு ஐரோப்பா மக்கள் தொகையை விட அதிகம். 130 கோடி மக்களுக்கு இலவச தடுப்பூசி வழங்கும் இயக்கம் என்பது பெரும்பாலான இந்தியர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு சாதனை திட்டம்.

மேலும், கொரோனா தொற்று நோய் தடுப்பு முயற்சிகளுக்காக பிரதமர் மோடியின் பெயரை அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிசீலிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM modi name nominate to Nobel prize-ashish sauchan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->