இந்திய குடிமகனின் வாழ்க்கையை... இதுவே எங்களது இலக்கு - பிரதமர் மோடி திட்டவட்டம்!
PM Modi moving towards making electricity
பிரதமர் நரேந்திர மோடி அசாம் மாநிலத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக சென்றிருந்தார். சுமார் 11,599 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். மேலும் சில முடிந்த திட்டங்களை திறந்து வைத்தார்.
அப்போது அவர் பேசியிருப்பதாவது, அனைத்து வீடுகளுக்கும் கடந்த 10 ஆண்டுகளில் மின்சாரம் வழங்க வேண்டும் என்ற பிரசாரத்தை நோக்கி ஓடினோம்.
தற்போது நாங்கள் கட்டணம் இல்லாமல் அனைத்து வீடுகளுக்கும் மின்சார வழங்க வேண்டும் என்ற நோக்கில் சென்று கொண்டிருக்கிறோம்.
இந்த பட்ஜெட்டில், வீட்டின் மேற்கூரை மீது மிகப்பெரிய அளவில் சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிப்பதற்கான சோலார் தகடுகள் அமைப்பது தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ளோம்.

இந்த திட்டத்தின் கீழ் 1 கோடி குடும்பங்களுக்கு சோலார் தகடுகள் அமைப்பதற்கு மத்திய அரசு முன்வந்துள்ளது. ஒவ்வொரு இந்திய குடிமகனின் வாழ்க்கையும் வசதியானதாக வேண்டும் என்பதுதான் அரசின் இலக்காக உள்ளது.
இது மத்திய அரசு பட்ஜெட்டில் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு பிறகு அசாமில் உள்ள அன்னை காமாக்கியா கோவிலுக்கு நான் தற்போது வந்துள்ளேன்.
இங்கு அன்னை காமாக்கியா திவ்யா பரியோஜனா திட்டத்திற்கு அடிக்கல் நாட்டில் உள்ளேன். இந்த திட்டம் விரைவில் நிறைவு பெற்ற வேண்டும். ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 நாட்களில் 24 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர் என மோடி தெரிவித்துள்ளார்.
English Summary
PM Modi moving towards making electricity