4 சக்கர வாகனத்தில் உணவு டெலிவரி செய்யும் மாற்று திறனாளி பெண்.. வைரலாகும் வீடியோ.!
Physical challenger women delivery food video viral
ஸ்விக்கி, உணவு டெலிவரி செய்வதற்கு நான்கு சக்கர வாகனத்தில் செல்லும் மாற்று திறனாளி பெண் குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.
தினமும் சமூக வலைதளங்களில் ஏராளமான வீடியோக்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதில் சில வேடிக்கையான வீடியோக்களும் அவ்வப்போது வெளியாகி வைரலாகி வருவது வழக்கம். சில சமயம் வித்தியாசமான மற்றும் விசித்திரமான நிகழ்வுகளை நாம் சமூக வலைத்தளங்களில் காண்கிறோம்.
அந்த வகையில், டெல்லியில், உணவு ஆர்டர்களை வழங்குவதற்காக மின்சார சக்கர நாற்காலியில் செல்லும் மாற்றுதிறனாளி பெண்ணின் வீடியோ சமூகவலைத்தளங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவி ஸ்வாதி மாலிவால் இந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். மேலும் அந்த ட்விட்டில் "வாழ்க்கை கடினமானது என்பதில் சந்தேகமில்லை, இந்த பெண்ணின் விடா முயற்சிக்கு நான் தலை வணங்குகிறேன்" என்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை, 2.8 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும் 13,500 க்கும் மேற்பட்ட லைக்களையும் பெற்றுள்ளது.
English Summary
Physical challenger women delivery food video viral