ஆற்றை கடக்கும் போது பைக்குடன் அடித்து செல்லப்பட்ட நபர்.. வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


தினமும் சமூக வலைதளங்களில் ஏராளமான வீடியோக்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதில் சில வேடிக்கையான வீடியோக்களும் அவ்வப்போது வெளியாகி வைரலாகி வருவது வழக்கம். சில சமயம் வித்தியாசமான மற்றும் விசித்திரமான நிகழ்வுகளை நாம் சமூக வலைத்தளங்களில் காண்கிறோம்.

இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலம் அகோலாவில் ஒரு நபர் தனது மோட்டார் சைக்கிளில் வெள்ளத்தில் மூழ்கிய பாலத்தை கடக்க முயற்சிக்கும் ஆற்றில் அடித்து செல்லப்படும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த நபர் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததைத் தொடர்ந்து அவர் தனது பைக்குடன் பெருக்கெடுத்த ஓடும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார்.

இந்த சம்பவத்தை மக்கள் கூட்டம் பார்த்துக் கொண்டிருந்தனர்,எனினும் ஒருவர் ஓடிச்சென்று காப்பாற்ற முற்படும் பொழுது ஆற்றின் போக்கில் அவர் செல்கிறார். அதன் பின்னர் அந்த நபர் காப்பாற்றப்பட்டு உயிருடன் இருப்பதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

person hit with a bike while crossing the river


கருத்துக் கணிப்பு

மக்கள் வரிப்பணத்தை எடுத்து கொடுத்துவிட்டு, மக்களையே ஓசில போறிங்க என்று அசிங்கப்படுத்தும் திமுக அமைச்சரின் பேச்சு?Advertisement

கருத்துக் கணிப்பு

மக்கள் வரிப்பணத்தை எடுத்து கொடுத்துவிட்டு, மக்களையே ஓசில போறிங்க என்று அசிங்கப்படுத்தும் திமுக அமைச்சரின் பேச்சு?
Seithipunal