மேற்கு வங்காளத்தில் மத்திய அமைச்சர் கார் மீது கல் வீச்சு.! - Seithipunal
Seithipunal


மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள கூச்பெஹார் நகர் தின்ஹதா பகுதியில் மத்திய உள்துறை மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறைக்கான இணை அமைச்சர் நிசித் பிரமானிக் இன்று கட்சி தொண்டர்களை சந்தித்து பேசுவதற்காக சென்றுள்ளார். 

அங்கு, அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆதரவு பெற்ற குண்டர்கள் அவரது பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அதுமட்டுமல்லாமல், அமைச்சரின் கார் மீதும் கற்களை வீசியுள்ளனர்.

இந்தத் தாக்குதலில், அமைச்சர் காரின் முன்பக்க கண்ணாடி உடைந்துள்ளது. மேலும், அங்கு அமைச்சருக்கு எதிராக கருப்பு கொடியும் காட்டப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அந்த பகுதியில் பா.ஜ.க. கொடி ஏந்திய ஆண்களும், பெண்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதைப்பார்த்த அமைச்சர் பிரமானிக் காரை விட்டு கீழே இறங்கி சென்று அவர்களை சமரசப்படுத்த முயன்றார். அதன் பின்னர் அமைச்சர் பிரமானிக், "தாக்குதல் நடத்தியவர்களை பாதுகாப்பதற்கு திரிணாமுல் காங்கிரஸ் முயற்சிக்கிறது" என்று குற்றச்சாட்டுத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

peoples stones pelted on central minister car in west bengal


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->