மரண பீதியில் மாரடைப்பு அச்சம்: பரிசோதனைக்காக மருத்துவமனையில் ஒரே நேரத்தில் குவிந்த மக்கள்: கர்நாடகாவில் பதற்றம்..!
People gathered at the hospital in Mysore for tests at the same time due to fear of heart attack
கர்நாடகா ஹாசன் மாவட்டத்தில் கடந்த இரு மாதங்களாக மாரடைப்புக்கு பலியாவோரின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளது. இதுவரையில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனால் அங்குள்ள மக்கள் பீதியில் உள்ளனர்.
அங்கு இளைஞர்கள் உள்பட பலர் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், இதய பரிசோதனை செய்வதற்காக, ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான பேர் மைசூரு மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-yu7a9.png)
இன்று அவ்வாறான சம்பவம் நடந்துள்ளது. சாம்ராஜ்நகரில் அரசுப் பள்ளியில் பயின்று வந்த 04-ஆம் வகுப்பு மாணவன் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு வகுப்பறையிலேயே உயிரிழந்துள்ளான். இதனால் கர்நாடகா மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
இந்நிலையில், மைசூருவில் உள்ள ஜெயதேவா மருத்துவமனையில், இதய பிரச்னைகள் குறித்து பரிசோதனை செய்ய நூற்றுக்கணக்கான மக்கள் ஒரே சமயத்தில் குவிந்துள்ளதோடு, பலர் வரிசையில் காத்திருந்து, இதய பரிசோதனையை செய்து வருவதால் மருத்துவமனை நிரம்பி வளிகிறது.
-mfg7j.png)
இந்த சம்பவம் குறித்து, ஜெயதேவா மருத்துவமனை நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'வெளியாகும் செய்திகளை பார்த்து மக்கள் பீதியடைந்துள்ளதாகவும், மருத்துவமனையில் சோதனை செய்து கொள்வதால் இதய பிரச்னைகள் தீர்ந்துவிடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு முதலில் உடல் நலத்தை பராமரிக்க வாழ்க்கை முறையில் மாற்றம் தேவை என்றும், தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அத்துடன், இதுபோன்று ஒரே நேரத்தில் கூட்டமாக பரிசோதனை செய்ய குவிவதால், ஏற்கனவே இதய நோய்க்கு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உரிய மருத்துவம் அளிக்க முடியாமல் போய் விடும் என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
People gathered at the hospital in Mysore for tests at the same time due to fear of heart attack