Salary-ஐ விட மன அமைதி முக்கியம்...!அரசு வங்கி வேலையை விட்டுவிட்டாரா? காரணம் கேட்டால் அதிர்ச்சி...! - Seithipunal
Seithipunal


அரசு வங்கி வேலைக்கு ராஜினாமா: மன அமைதியே முக்கியம் என்கிறார் 29 வயது இளம்பெண்!
அரசு வேலை என்பது பலரின் கனவு. ஆனால், டெல்லியைச் சேர்ந்த 29 வயது வாணி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் அதிகாரியாக சேர்ந்திருந்தும், அதனை பெரும் சுமையாக உணர்ந்து தற்போது ராஜினாமா செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,"பணத்தை விட மன அமைதியே முக்கியம். கடந்த 3 ஆண்டுகளில் நான் எரிச்சலாகவும், எளிதில் கோபப்படும் தன்மையோடும் மாறிவிட்டேன். என் கதையை மட்டுமே பகிர்கிறேன், யாரையும் வங்கிப் பணியில் சேர வேண்டாம் என சொல்லவில்லை” என்று வாணி குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோ வைரலாகி, நெட்டிசன்கள் கலவையான கருத்துகளை பகிர்கின்றனர். இதில் சிலர் தைரியம் பாராட்ட, சிலர் விமர்சனங்களையும் எழுப்பினர்.

அதற்கு வாணி, “என்னிடம் சேமிப்புகள் உள்ளன, கடன்களும் இல்லை. மாதச் செலவுகள் 5 ஆயிரத்திற்கும் குறைவு,” என பதிலளித்துள்ளார்.

 



இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Peace of mind more important than salary Did he quit his government bank job When asked reason he was shocked


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->