பட்டுக்கோட்டை | காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு! முன்விரோதம் இருந்ததா? போலீசார் விசாரணை! - Seithipunal
Seithipunal


தஞ்சை மாவட்டம்: பட்டுக்கோட்டை ஆணை விழுந்தான் குளத்தெருவை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (வயது 26). இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் மாநில மாணவரணி இளைஞர் பொது செயலாளராக இருக்கிறார். 

இந்நிலையில் நேற்று இரவு 1:30 மணி அளவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து ஸ்ரீகாந்தின் வீட்டின் முன்புறத்தில் பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலை வீசிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதனால் வீட்டின் முன்புற கதவில் இருந்த திரைச்சீலை மட்டும் எரிந்தது. இந்த சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் ஸ்ரீகாந்திற்கு தகவல் கொடுத்தனர்.

அவர் உடனே வீட்டிற்கு வெளியே வந்து பார்த்து, தீ பிடித்து எரிந்து கொண்டிருந்த திரைசீலையை அணைத்து விட்டார். இலாபகரமாக இந்த பெட்ரோல் குண்டு வீச்சில் வீட்டில் இருந்தவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. 

பின்னர் ஸ்ரீகாந்த் இது குறித்து பட்டுக்கோட்டை நகர காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். புகாரி பேரின் போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். 

காங்கிரஸ் நிர்வாகி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பட்டுக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

பெட்ரோல் குண்டு வீச்சுக்கான காரணம் குறித்து போலீசார், ஸ்ரீகாந்திற்கு வேறு யாருக்கும் முன்விரோதம் இருந்ததா? அல்லது வேறு காரணமா என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pattukkottai congress leader home petrol bombing


கருத்துக் கணிப்பு

இந்திய அணியின் பயிற்சியாளாராக கவுதம் கம்பீர் தேர்வு சரியானதா?Advertisement

கருத்துக் கணிப்பு

இந்திய அணியின் பயிற்சியாளாராக கவுதம் கம்பீர் தேர்வு சரியானதா?
Seithipunal
--> -->